/

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்.

Updated On :4 ஜூன் 2022, 3:40 pm

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பொதுத் தேர்வுகளில், 12ஆம் வகுப்பை சேர்ந்த 1.95 லட்சம், 10ஆம் வகுப்பை சேர்ந்த 2.25 லட்சம், 11ஆம் வகுப்பை சேர்ந்த 2.58 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 6,79,467 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 

இதையடுத்து, பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.