ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது. 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு இரவு 10.10 மணிக்கு குவாஹாட்டியில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் மும்பை அணி பந்துவீச்சை பதற்றமின்றி ஆடி, பந்துகளை அடிக்கடி பௌண்டரி எல்லைக் கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டனர். இதனால் அந்த அணியின் ரன்-ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அந்த அணியின் ஸ்ட்ரைக் ரேட் ஏறத்தாழ 227-க்கும் மேல்.
இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்களை இழந்து 150 ரன்களைக் குவித்தது.
ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. அதில் 4 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகள் அடங்கும். அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பௌண்டரியுடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 278.5.
தொடர்ந்து, 66 பந்துகளில் 151 ரன்கள் என்ற இமாலய இலக்கு மும்பை அணி வெற்றிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Summary
Rajasthan Royals vs Mumbai Indians, 13th Match
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


