நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம்: குமரியில் பரபரப்பு! (விடியோ)

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நபரது உடலை தோண்டி வேறு இடத்தில் அடக்கம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image

இறந்த சகோதரரின் உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யும் கிறிஸ்டோபர். 

Updated On :4 ஜூன் 2022, 7:02 am

DIN

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நபரது உடலை தோண்டி வேறு இடத்தில் அடக்கம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ்(60). இவர் கடந்த மே 12 ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 16 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் அவரது தாய் - தந்தை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைத் தோட்டத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது சகோதரரான கிறிஸ்டோபர் என்பவர் அவரது மனைவி மற்றும் ஒரு சிலரோடு வந்து ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்ய முயன்றுள்ளார். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனை மீறி கிறிஸ்டோபர் ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து மாற்று இடத்தில்  சிறிய அளவு பள்ளம் தோண்டி அதில் அடக்கம் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக அவரது மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.