சட்டத்திற்கு புறம்பான செயல்கள், புகார்கள் இருந்தால் தான் அந்த கோயில்கள் குறித்து விசாரணை நடத்துவோம். இறையன்பர்களின் மகிழ்ச்சிதான் அறநிலையத்துறையினர் மகிழ்ச்சி என்றார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், எஸ்.ராஜகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், நகராட்சித் தலைவர் என்.செல்வராஜ், அரசு வழக்குரைஞர் ராம.சேயோன், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் சி.மணி, ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன், கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.