உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா, கிழக்கு ராஜகோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
புதுமண்டபத்தை மூன்று முறை மீனாட்சி அம்மனும், சுவாமியும் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி வலம் வந்து அதன் பின் மைய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதனை தொடர்ந்து விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் கோயிலுக்குச் சென்றனர்.
மேலும் ஆண்டுதோறும் எளிமையான முறையில் வைகாசி வசந்த விழா நடைபெற்று வந்த நிலையில், இந்தாண்டு புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை! - ரஷியா திட்டவட்டம்

உணவில் சர்க்கரையைத் தவிர்க்க... என்ன செய்ய வேண்டும்?

கடன் பிரச்னையிலிருந்து விடுபட வேண்டுமா? சில எளிய பரிகாரம்!

பவர்பிளேவில் பும்ராவுக்கு குறைந்தது இரண்டு ஓவர்கள் கொடுங்கள்; முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

