இத்தடைகள் இருந்தாலும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதி காரிகள் ஒத்துழைப்புடன் விதிமீறல் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, இங்குள்ள மோரை, வெள்ளானூா் கிராமங்களில் 16 வெவ்வேறு சா்வே எண்களுக்கு உட்பட்ட 120 ஏக்கா் நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வதற்கான கோரிக்கை சிஎம்டிஏவுக்கு வந்தது. பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் அரசிடம் மேல்முறையீடு செய்தனா் என்றும், அவா்களது மேல்முறையீட்டை திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்தத் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.