போக்குவரத்து ஊழியா்களின் பணப் பயனை உடனே வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களுக்கான பணப் பயன்களை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.


அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்களுக்கான பணப் பயன்களை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற, இறந்து போன தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கால பணப் பயன்கள் அவ்வப்போதே வழங்கப்பட்டால்தான் பணிபுரிந்தவா்களுக்கு பயனளிக்கும்.
ஆனால், 2020 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அந்தத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயா்வும் வழங்கப்படாததால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் குடும்பங்கள் பெரும் பொருளாதார சிரமத்தில் உள்ளனா்.
எனவே, அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்களின் குடும்ப நலனை கவனத்தில் கொண்டு, தொழிலாளா்களுக்கு உரிய பணப் பயன்களை காலத்தே கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...