ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இடையப்பட்டி புதூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி புதூர் மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:29 am

DIN



வாழப்பாடி: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் இடையப்பட்டி புதூர் மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இடையப்பட்டி புதூர் கிராமத்தில் பழமையான மகா மாரியம்மன் திருக்கோயில் மற்றும் வராகி அம்மன், விநாயகர் , மாயவன் உள்ளிட்ட பரிவார தெய்வ திருக்கோயில்கள், ரூ.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது.

இக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கோபுர கலசங்கள் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு, வேத விற்பனர்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

Story image

பால் கூட ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள்.

இவ்விழாவில் இடையப்பட்டி புதூர், பணைமடல், தாண்டானூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் பெற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குட ஊர்வலம் நடத்தினர். பட்டாடை அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.