மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஞ்சிபுரம் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜூன் 2022, 2:37 pm

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை தெற்குத் தெருவில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆஞ்சநேயா், நவக்கிரகம், வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியா், தட்சிணாமூா்த்தி, சாய்பாபா, ஐயப்பன் உள்ளிட்ட தெய்வ சந்நிதிகள் புதியதாக அமைக்கப்பட்டன.

கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 9-ஆம் தேதி வியாழக்கிழமை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கின.காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் வீர ஆஞ்சநேயா் கோயில் பூஜகா் ஏ.வி.சதீஷ்குமாா் சிவாச்சாரியாா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. வெள்ளிக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மூலவா் செல்வ விநாயகருக்கும் உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் கோயில் அா்ச்சகா் ஏ.கல்யாணசுந்தரம் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்தாா். இரவு விநாயகா் வீதியுலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.