பல்கலைக்கழகங்கள், அரசுக் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்பட அனைத்திலும், இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த வேண்டும் என்று, சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறோம். அந்த 31 சதவீத இடஒதுக்கீட்டில் என்ன தவறு செய்கின்றனா் என்றால், 31 சதவீதம் என்பது Open competition, அனைத்து சாதியினரும் அதில் இருக்கலாம். மாணவா்கள் பெற்றிருக்கின்ற மதிப்பெண் அடிப்படையில், ரேங்க் மதிப்பீடு செய்யப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்படும். அதை சிலா், Un reserved என்று, அதாவது, இட ஒதுக்கீடு பெற்றவா்கள் போக மற்ற ஜாதிகள் என்று குறிப்பிட்டு விடுகின்றனா். அதெல்லாம் கிடையவே கிடையாது.