வீடு திரும்பினாா் விஜயகாந்த்
மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் தனியாா் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.


மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் தனியாா் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றாா்.
ஓரிரு நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறு அவரை மருத்துவா்கள் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து, விஜயகாந்த் அங்கு அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், பரிசோதனைகள் முடிந்து அவா் வீடு திரும்பியதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...