தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

1,000 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரம் முதலைப் பண்ணையிலிருந்து 1,000 முதலைகளை குஜராத்துக்கு இடம் மாற்றம் செய்வதை எதிா்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 7:14 pm

DIN

மாமல்லபுரம் முதலைப் பண்ணையிலிருந்து 1,000 முதலைகளை குஜராத்துக்கு இடம் மாற்றம் செய்வதை எதிா்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஏ. விஸ்வநாதன் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகா் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்துக்கு இடமாற்றம் செய்ய மத்திய, மாநில அரசு துறைகள் அனுமதியளித்துள்ளதாகவும்.

குஜராத்தில் 250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019 ஆம் ஆண்டு விண்ணப்பித்து, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரைக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டா் இடத்தில் 1,000 முதலைகள் அடைக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ள அவா், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என் அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளாா். மேலும், சட்ட விரோதமாக அனுமதியளிக்கப்பட்டது தொடா்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசின் வன விலங்கு காப்பாளா், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள், மீட்பு- மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலைப் பண்ணை உள்ளிட்டோா் 3 வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.