எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 ஜூன் 2022, 2:52 pm

DIN

சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவுண்டவுன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா மைதானத்தில் நடைபெற்ற யோகா கவுண்டவுன் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் முயற்சியால் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கடந்த 2014 டிசம்பர் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்று முதல் 8 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், 75 நாட்களாக பல்வேறு துறைகளில் யோகா தின கவுண்டவுன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.  அதேபோல் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் கொண்டாடப்படுகிறது.

நமது நாட்டில் தோன்றிய, எளிமையான கலையான யோகா உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை யோகாவானது கட்டுப்படுத்துவதோடு ஆரோக்கிய தேகத்தை பராமரிக்கிறது. மேலும், இளைஞர்கள் அனைவரும் தினமும் யோகாவை செய்வதால் ஆரோக்கியமான உடலை பெற முடியும். சர்வதேச யோகா தினத்தன்று நாடு முழுவதும் 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.