இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தேதி மாற்றம்

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

News image
Updated On :18 ஜூன் 2022, 10:14 am

DIN

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் அணை கட்டக் கூடாது என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. இதுகுறித்து, தமிழக சட்டமன்றக் கட்சிகள் அடங்கிய குழு, தில்லிக்குச் சென்று, மத்திய அமைச்சரைச் சந்தித்து, தமிழக அரசின் நிலையை எடுத்துக் கூற இருப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்றார்.

அந்தக் குழுவில் நானும் பங்கேற்க வேண்டும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.

எனவே, வருகின்ற 25.06.2022 அன்று, சென்னை எழும்பூர் தாயகத்தில் நடைபெற இருந்த, மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மாற்றி வைக்கப்படுகின்றது.

உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 28.06.2022 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.