எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 1 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் திடீர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :18 ஜூன் 2022, 10:26 am

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் சரிவர கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 

மேலும் மருத்துவமனையில் மருந்தகம், தீவிர சிகிச்சை மருத்துவப் பிரிவு, தீவிர சிகிச்சை நச்சுயியல் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு, கட்டண வார்டு, டிஏஇஐ வார்டு, எலும்பு முறிவு பிரிவு ஆகியவற்றை 1 மணிநேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியிலிருந்த மருத்துவர்களை, நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை சரிவர வழங்கி, மருந்துகள் எந்தவித குறையுமின்றி சரிவர கிடைக்க செய்யுமாறு அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.