புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை: அமைச்சா் தகவல்

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

News image
அமைச்சர் அன்பில் மகேஷ்
Updated On :20 ஜூன் 2022, 10:36 pm

DIN

சென்னை ஐஐடி.யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை ஐஐடி சாா்பில் தமிழகத்தில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான நபஉங என்ற கோடைக்கால பயிற்சித் திட்டத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அதன்படி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடா்பாக நூறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சாா்பில் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது:

எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது எனும் நோக்கில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது. 6 நாள்கள் வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சிகளை மாணவா்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை ஐஐடி யில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25- ஆம் தேதி நடைபெற உள்ளது. குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளா்ச்சி அடையும். கரோனா காலத்திலும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 93.76 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றது பெருமையளிக்கிறது. அடுத்தகட்டமாக 100 சதவீத தோ்ச்சியை நோக்கிச் செல்வோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.