புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கச்சத்தீவை மீட்பார் மோடி: வி.பி.துரைசாமி நம்பிக்கை

2024 மக்களவைத் தேர்லுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி கட்சத்தீவை மீட்பார் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

News image
தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
Updated On :20 ஜூன் 2022, 10:41 am

DIN


2024 மக்களவைத் தேர்லுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்பார் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.   

நாளை 8 -ஆவது சர்வதேச யோகா நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் பாஜக சார்பில் யோகா நாள் கொண்டாடப்பட உள்ளதாகவும், மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். 

மேலும், தேசநலனைக் கருத்தில் கொண்டு இளமைத்துடிப்பான ராணுவத்தை உருவாக்கவே அக்னிபத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், தேசப்பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசியல் கலப்பது நல்லதல்ல என்றார். 

நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் காங்கிரஸ் செயல் சிறுபிள்ளைத்தனமானது என துரைசாமி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.