கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழ்நாட்டில் புதிதாக 771 பேருக்கு கரோனா

​தமிழ்நாட்டில் புதிதாக 771 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜூன் 2022, 2:55 pm

DIN


தமிழ்நாட்டில் புதிதாக 771 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 771 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,63,068 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 459 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,20,364 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 4,678 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 345
செங்கல்பட்டு - 126
கோவை - 55
காஞ்சிபுரம் - 18
கன்னியாகுமரி - 44
மதுரை - 17
ராணிப்பேட்டை - 12
திருவள்ளூர் - 32
தூத்துக்குடி - 12
திருநெல்வேலி - 19
திருச்சி - 13
வேலூர் - 11

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.