கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நாசரேத் துணை மின்நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாசரேத் மின்வாரிய அலுவலகம்

Published On :


சாத்தான்குளம்: நாசரேத் துணை மின்நிலையத்தில் ஆய்வாளர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை கே.டி.சி, நகரைச் சேர்ந்தவர் பூவையா. இவரது மகன் ஆனந்தபாண்டி (51). இவர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். 

இந்நிலையில், புதன்கிழமை காலையில் பூமிநாதன் என்பவர் பணிக்கு வந்துள்ளார். அப்போது ஆனந்தபாண்டி அறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமிநாதன் நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து காவல் ஆய்வாளர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனந்த பாண்டியின் தலை, முதுகு உள்பட உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

ஆனந்த பாண்டியை கொலை செய்தவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் நேரில் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.