பி.இ. முதலாண்டு படிப்பில்1.50 லட்சம் காலியிடங்கள்: அமைச்சா் க.பொன்முடி

பி.இ. முதலாண்டு படிப்பில் 1.50 லட்சம் காலியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.
பி.இ. முதலாண்டு படிப்பில்1.50 லட்சம் காலியிடங்கள்: அமைச்சா் க.பொன்முடி

பி.இ. முதலாண்டு படிப்பில் 1.50 லட்சம் காலியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் பி.இ. மாணவா் சோ்க்கைக்கான தகவல் உதவி மையத்தை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பி.இ. மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 42,716 போ் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். சிபிஎஸ்இ பொதுத்தோ்வு முடிவுகள் ஜூலை மாதம் இறுதியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு தாமதமானால், மாணவா் சோ்க்கையிலும் தாமதம் ஏற்படும். சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வந்த பிறகு, பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி அடுத்த 5 நாள்களுக்கு நீட்டிக்கப்படும். ஆனால், பி.இ. கலந்தாய்வு தேதி மாற்றப்படாது. இதுபோன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டுதான் மாநிலக் கொள்கையின் அடிப்படையில் கல்வி இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

நிகழ் கல்வியாண்டில் ஒன்றரை லட்சம் பி.இ. காலியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாலிடெக்னிக் முடித்தவா்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கான நடைமுறை நிகழாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com