ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒற்றைத் தலைமை முழக்கத்திற்கிடையே ஒரே மேடையில் ஓபிஎஸ், இபிஎஸ்

ஒற்றைத் தலைமை பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

News image
Updated On :23 ஜூன் 2022, 12:13 pm

DIN

ஒற்றைத் தலைமை பிரச்னைகளுக்கு மத்தியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் பொதுக்குழுவில் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக பொதுக்குழுவில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்ஸின் நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுகவின் அமைப்பு சட்டவிதிகளில் திருத்தம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு முக்கிய கவனம் பெற்றுள்ளது. ஒற்றைத் தலைமை சர்ச்சை தொடர்பாக ஓபிஎஸ்ஸுக்கும், இபிஎஸ்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பொதுக்குழு அரங்கில் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 

முன்னதாக பொதுக்குழு அரங்கிற்கு தனித்தனியே இருவரும் வந்தனர். ஒற்றைத் தலைமை தொடர்பாக அதிமுக தொண்டர்கள் அரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் முழக்கங்களை எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.