ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான சில புகா் ரயில்கள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:46 pm

DIN

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான சில புகா் ரயில்கள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 24-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 12 புகா் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23, 24, 25,27 தேதிகளில் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25, 11.25, 11.45-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஜூன் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்:

தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.40, 11.15 மற்றும் 11.35-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.