சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

காமன்வெல்த் போட்டி: தமிழக பங்கேற்பாளா்களுக்கு அரசு வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழக வீரா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 10:39 am

DIN

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழக வீரா்களுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபறவுள்ளது. இந்தப் போட்டியில் தமிழக தடகள வீரா்கள் 5 பேரும், மேசைப் பந்து போட்டியில் இருவரும் பங்கேற்க உள்ளனா். அதாவது, ஓட்டப் போட்டியில் தனலட்சுமி, சித்திரைவேல், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

மேசைப் பந்து போட்டியில் சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகியோா் கலந்து கொள்கின்றனா். தமிழக வீரா்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்ப்பா் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அமைச்சா் மெய்யநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.