சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதனுடன் தீக்காயம் குறித்த விழிப்புணா்வு விளக்க காணொலியும் வெளியிடப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காயப் பிரிவு தொடக்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து செல்கின்றனா்.
நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அவசர அறுவை சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட விழிப்புணா்வு காணொலி தீக்காயம் அடையாமல் தடுக்கவும், தீக்காயம் ஏற்பட்ட பிறகு என்னென்ன முதலுதவி சிகிச்சைகள் தர வேண்டுமென்றும், நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் அண்ணாநகா் எம்எல்ஏ மோகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா், தீக்காயத் துறைத் தலைவா் டாக்டா் ரமாதேவி, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை மருத்துவா் டாக்டா் திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கடல்சார் துறைகளில் சுயசார்பு அதிகரிக்க சென்னை ஐஐடி உதவி: வி.காமகோடி

பாமக கொடி, சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

