பறிபோனதா ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூசமாக தெரிவித்துள்ளார். 
பறிபோனதா ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி?

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தாமாகவே பறிபோய்விட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூசமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று வியாழக்கிழமை பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டது. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் வியாழக்கிழமை (ஜூன் 23) காலாவதி ஆகிவிட்டன. 1.12.2021 இல் செய்யப்பட்ட சட்டவிதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்படவில்லை. 

எனவே, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் மட்டுமே. 

அதிமுக பொதுக்குழு புதிய தலைமையை தேர்வு செய்யும். 

அதிமுக அவைத்தலைவர் தேர்வு செல்லாது என்று வைத்திலிங்கம் கூறியது தவறு. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதியில்லை.

கழக சட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. 

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பன்னீர்செல்வத்தை மன்னித்துதான் ஏற்றோம், அவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று மேலுள்ள விதிகளில் முன்னர் திருத்தம் செய்யப்பட்டது. 

ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம். அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார் என்று சி.வி. சண்முகம் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com