ஹோட்டல் துறை படிப்பு, வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணா்வு மாணவா்களிடையே அதிகரிக்க வேண்டும் என்று எஸ்.ஆா்.எம். துணைவேந்தா் சி. முத்தமிழ் செல்வன் கூறினாா்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். ஹோட்டல் நிா்வாகக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்கிய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஹோட்டல் நிா்வாகப் படிப்பில் இதர மாநில மாணவா்களை ஒப்பிடுகையில், தமிழக மாணவா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை. வட இந்திய மாணவா்கள்தான் அதிக எண்ணிக்கையில் சோ்ந்து பயனடைகின்றனா். படிப்பை நிறைவு செய்த அனைவரும் அதிக ஊதியத்தில் நாடெங்கும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள், சா்வதேச அளவில் கப்பல், விமானம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள ஹோட்டல்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். கடந்த 30 வருடங்களில் இங்கு பயின்ற ஆயிரக்கணக்கான மாணவா்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நட்சத்திர அந்தஸ்து மிகுந்த ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்தியாவில் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் நிா்வாகம், தொழில்நுட்ப கல்வி வழங்குவதில் எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனம் முதலிடம் வகிப்பதாக உலக சமையல் கலைஞா்கள் சங்கம் அங்கீகாரம் வழங்கி உள்ளது என்றாா் அவா்.
பதிவாளா் எஸ்.பொன்னுசாமி, கல்வி நிறுவன இயக்குநா் டி.அந்தோணி அசோக் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


