அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்
தலைமை தீர்மானம் நிறைவேற்ற உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிக்க | ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?
இதையடுத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மற்றும் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஓ. பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக விவகாரம் குறித்து பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக நேற்று தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோர் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | என்ன, ஓ. பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


