அதாவது, அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே திருத்தப்பட்டுத்தான் சட்ட விதிகளுக்கு உள்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த சட்ட விதிகளுக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளுக்கு பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால், அவையும் காலாவதியாகிவிட்டன.