

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் திரெளதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக இன்று சொந்த ஊரிலிருந்து தில்லி வந்தடைந்த திரெளபதி, பிரதமர் மோடியை சந்தித்தார்.
இதையும் படிக்க | எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்முவை தேர்வு செய்ததற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பளித்துள்ளனர். அடிப்படை பிரச்னைக்கான புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான திரெளபதியின் பார்வை சிறப்புக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.