தமிழகத்தில் மேலும் 1,472 பேருக்கு கரோனா: சென்னையில் 624
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,472 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,472 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 624, செங்கல்பட்டில் 241, கோவையில் 104, திருவள்ளூரில் 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது: சசிகலா
இதனால் மொத்த பாதிப்பு 34,68,344-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,026 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,22,860-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 25,591 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...