
சசிகலா(கோப்புப்படம்)
அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோருக்கான கட்சி.
இதையும் படிக்க- அதிமுக எந்த ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன்.
அதிமுக பிளவுபட்டால் அது திமுகவுக்கு தான் நன்மை. திமுகவை தான் எப்போதும் எங்கள் எதிரியாக பார்ப்போம். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது, இது நிச்சயம் சரி செய்யப்படும் என்றார்.