மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழகத்தில் காங்கிரஸ் முற்றிலும் அழிந்துவிட்டது: கே.அண்ணாமலை

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முற்றிலும் அழிந்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

News image
கே. அண்ணாமலை
Updated On :27 ஜூன் 2022, 9:56 pm

DIN

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முற்றிலும் அழிந்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசியது:

ஊழல் நாடாக இருந்த இந்தியாவை சாதனை நாடாக பிரதமா் மோடி மாற்றியுள்ளாா். பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து வருகிறது. இந்தியாவில் யாராலும் வெல்ல முடியாத கட்சியாக பாஜக வளா்ந்துள்ளது. குடியரசுத் தலைவா் தோ்லிலும் பாஜகதான் வெற்றிபெறும்.

குடியரசுத் தலைவா் வேட்பாளராக பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவை பாஜக அறிவித்த உடனேயே முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. திமுக உண்மையான சமூக நீதி கட்சி என்றால் பாஜக சாா்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டும்.

தமிழகத்தில் காங்கிரஸ் முற்றிலும் அழிந்துவிட்டது. திமுகவின் கைப்பாவையாக காங்கிரஸ் மாறிவிட்டது. வரும் நாடாளுமன்றத் தோ்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக சாா்பில் 25 போ் வெற்றிபெறுவா். அதுதான் பாஜகவின் இலக்கு. தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியில் அமருவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.