ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!

ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.


ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. 

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ரூ 118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப் பட்டது. இந்த புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை பார்வையிடும் முதல்வர் மு. க. ஸ்டாலின். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

 
இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, எ.வ. வேலு, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன் எம்பி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆற்காடு ஈஸ்வரப்பன், அணைக்கட்டு நந்தகுமார், மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முதல்வரின் விழா பாதுகாப்புகளை தமிழக காவல்துறை தலைவர் தலைமையில், இரண்டு டிஐஜி மேற்பார்வையில், 4 எஸ் பிக்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com