47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 69 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு திமுக சார்பில் அவரது வயதான  69-ஐ கொண்டாடும் 

News image
69 கிலோ கேக் வெட்டிக் கொண்டாடிய 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மல்லிகா மற்றும் அவரது கணவரான மாநில வர்த்தக அணியின் துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்.
Updated On :1 மார்ச் 2022, 6:12 am

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு திமுக சார்பில் அவரது வயதான  69-ஐ கொண்டாடும் வகையில் 69 கிலோ கேக் வெட்டி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினார்கள்.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு 18-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள மல்லிகா ராமகிருஷ்ணன் தான் வசிக்கும் வைகுண்டம் தெருவில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது அவரது வயதான 69-ஐ குறிக்கும் வகையில் 69 கிலோ கேக் வெட்டியும், அனைவருக்கும் இனிப்பும் வழங்கினார். தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். 

இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணியின் துணைச் செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்குமார், வட்டப் பிரதிநிதிகள் சம்பத், வரதன், விஜயா, கீதா ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். நகரின் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், இனிப்பு வழங்குதல் மற்றும் அன்னதானங்களும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.