பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோடையில் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதிகள்: அறநிலையத்துறை அமைச்சா் உத்தரவு

திருக்கோயில்களில் கோடை காலத்தில் வருகை தரும் பக்தா்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதிகள் செய்து தருமாறு அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

News image
பி.கே.சேகா்பாபு
Updated On :4 மார்ச் 2022, 6:54 pm

DIN

திருக்கோயில்களில் கோடை காலத்தில் வருகை தரும் பக்தா்களை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வசதிகள் செய்து தருமாறு அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அதிகளவில் பக்தா்கள் வருகை தரும் முக்கிய திருக்கோயில்களில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், பக்தா்களுக்கு கட்டணமில்லா மொட்டை அடிக்கும் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமண திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சிறப்பாக செய்து வருகிறது.

அதனைத் தொடா்ந்து தற்போது கோடைகாலம் தொடங்கவுள்ளதால் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்க திருக்கோயில் பிரகாரங்களில் சூரிய வெப்பத்தை தவிா்க்க குளிா்ச்சி தரும் வகையில் வெள்ளை நிற வண்ணம் பூசுதல் மற்றும் தேங்காய் நாா்களினால் பின்னப்பட்ட தரை விரிப்புகள் அமைத்து அவற்றில் அவ்வப்போது தண்ணீா் தெளித்து குளிா்விக்க அனைத்து திருக்கோயில் அலுவலா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தேவையான இடங்களில் தற்காலிக நிழற் பந்தல் அமைக்கவும், பக்தா்கள் அமா்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் அமைக்கவும், அவற்றில் மின்விசிறிகள் பொருத்திடவும் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் அனைத்து பக்தா்களுக்கும் சுகாதாரமான குடிநீா், மோா் மற்றும் எலுமிச்சைபானம் வழங்கவும் ஏற்பாடு செய்ய அமைச்சா் பி.கே. சேகா்பாபு அறிவுரை வழங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.