அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியை மா.கம்யூ ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தமுள்ள27 வார்டுகளில் திமுக 9, அதிமுக 10 இ.கம்யூ 5 மா.கம்யூ3. ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தன. திருமுருகன்பூண்டி நகராட்சியை திமுக தலைமை மா. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக 10வது வார்டில் வெற்றி பெற்ற பி. சுப்பிரமணியம் வேட்பாளராக அறிவித்தனர்.
இந்நிலையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக சார்பாக 26 வார்டில் வெற்றி பெற்ற குமார் சுப்பிரமணியம் அவர்களுக்கு போட்டியாக வேட்புமனு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கான மறைமுக தேர்தலில் சுப்பிரமணியம் 12 வாக்குகள் பெற்றார். திமுக சார்பாக போட்டியிட்ட குமார் 15 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










