நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: ஈரோடு அணி 2-ம் இடம்

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது. 

News image

கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஈரோடு அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. 

Updated On :5 மார்ச் 2022, 3:44 am

DIN

ஈரோடு: மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. 11,13,15,17 வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கேரளம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின.

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இரண்டாம் இடத்தை பிடித்த ஶ்ரீஹரி, ரோகித், மிதுன், ஜீவா, சாந்தனு, ஜூடோ சாரன், தரணீஷ் ஆகியோரை அணியின் பயிற்சியாளர் ராஜகோபால், கவுதம், மனோஜ் பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.