மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு கே.அண்ணாமலை கடிதம்
செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்


செஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
உக்ரைனில் இருந்து தொடா் முயற்சியெடுத்து இந்தியா்களை மீட்டு வருவதற்காக தங்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் நன்றி.
இந்த நேரத்தில் செஷல்ஸ் கடற்படையினரால் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த 41 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
அந்த மீனவா்களை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை தாங்கள் துறை ரீதியாக எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...