புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கக்கூடாது: ராமதாஸ்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 7:42 pm

DIN

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் பாசன மாவட்டங்களில் நரிமணம், அடியக்கமங்கலம், நன்னிலம் 1, நன்னிலம் 2, கூத்தாநல்லூா், கோவில்கலப்பல், பூண்டி ஆகிய 7 வட்டங்களில் 30 எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 2015-இல் அனுமதி அளித்திருந்தது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட காலம் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்ட நிலையில், ஏற்கெனவே அனுமதி அளித்ததில் விடுபட்ட 9 எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேலும் 3 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள வல்லுநா் மதிப்பீட்டுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காவிரிப் பாசன மாவட்டங்களில் 30 எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்து விட்ட நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளாக இருந்தாலும், அவை புதிய திட்டங்களாகத்தான் கருதப்படும். வேளாண்மையை அழிக்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கக் கூடாது. தமிழக அரசும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.