மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

News image
Updated On :13 மார்ச் 2022, 8:45 am

DIN


சென்னை: தமிழர்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் திமுக அரசு காப்பாற்றும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,

நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க குழு அமைக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து மாணவர்கள், தமிழர்கள் என 2 ஆயிரம் பேரை மீட்டு வந்துள்ளோம். தமிழர்கள் எங்கிருந்தாலும் திமுக அரசு அவர்களை காப்பாற்றும். 

மேலும் தமிழர் என்றால் ஒரு உணர்வு வரும் எனவும், அது உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் உள்ளவராக இருந்தாலும் சரி என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.