ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி, குழந்தை பலி

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும், அவரைக் காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

News image
Updated On :14 மார்ச் 2022, 3:15 pm

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவனும், அவரைக் காப்பாற்ற சென்ற மனைவி, குழந்தையும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வேட்டங்குடி  கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம்(34) கொத்தனார். இவர் நேற்று தனது மாடிவீட்டில் பழுதடைந்த மின்சார ஸ்விட்சை சரி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிவாச ரத்தினத்தை மின்சாரம் தாக்கி உள்ளது. அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா (28) இடுப்பில் தனது ஒரு வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.   

தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன்,  விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.