தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல ஐஜியாக இருந்த டி.எஸ். அன்பு, சட்டம், ஒழுங்கு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் சட்டம்- ஒழுங்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த செந்தில் குமார், மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.டி. துரை குமார், மதுவிலக்கு - அமலாக்கத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் உள்ள சுமித் சரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐஜியாக இருக்கும் சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சென்னை ஐ.ஜி.யாக உள்ள என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக உள்ள வனிதா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை ரயில்வே கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் நலன் பிரிவு ஐ.ஜி. மல்லிகா, இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை விரிவாக்கப் பரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவலர் நலன் ஏஐஜி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை காவலர் நலன் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய ஐஜி பால நாகதேவி சென்னை செயலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐஜி ஜெயராம் சென்னை ஆயுதப்படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரச பணியில் ஐஜியாக இருக்கும் ஆயுஷ்மான் திவாரி ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஜார்கண்ட் சிஆர்பிஎஃப் ஐஜியாக இருக்கும் மகேஷ்வர் தயாள் ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தோ எல்லைப் பாதுகாப்புப் பிரிவில் ஐஜியாக இருக்கும் சுமித் சரண் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மோடக், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...