கம்பம்: தேனி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவிக்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்குவது சுற்றுலா தளமான சுருளி அருவி, அடர்ந்த வனப் பகுதியான ஸ்ரீவல்லிபத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது.
கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட சுருளி அருவி, தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது, அருவியில் பக்தர்கள் குளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது சுற்றுலா பயணிகள் வருகை சுருளி அருவிக்கு அதிகமாக உள்ளது.
கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவி பகுதிக்கு வருகை தந்து பச்சை பசேலென மரங்களின் நிழலில் இளைப்பாறி, இயற்கை காட்சிகளை ரசித்து செல்கின்றனர்.
இதுபற்றி சுற்றுலா பயணியான மதுரையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் கூறும்போது,
அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும் குளிக்க நன்றாகவும், புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது.
மேகமலையில் உள்ள அணைப்பகுதியில் இருந்து தண்ணீரை சிறிது கூடுதலாக திறந்துவிட்டால் சுற்றுலா பயணிகளுக்கு மனநிறைவாக குளித்து செல்வார்கள் என்றார்.
புலிகள் காப்பக வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, தொற்று பரவல் காரணமாக தடைசெய்யப்பட்ட சுருளி அருவி பகுதி, தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டு இயற்கையை ரசித்து செல்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

