புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 19) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:43 pm

DIN

மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 19) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழக பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 19) இடியுடன் கூடிய லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

மாா்ச் 20 முதல் 22 வரை: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் முதல் மாா்ச் 22-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை உயரும்:

அதேநேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.