புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை ஐஐடியில் ஆந்த்ராக்ஸ் தொற்றால் மான் உயிரிழப்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக ஒரு மான் உயிரிழந்திருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :18 மார்ச் 2022, 3:52 am

DIN

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக ஒரு மான் உயிரிழந்திருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை ஐஐடி வளாகத்தில் மூன்று மான்கள் உயிரிழந்த நிலையில் அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் இரு மான்களுக்கும் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐஐடி வளாகத்தில் விலங்குகளின் அருகில் மக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆந்த்ராக்ஸ் எனும் தொற்று குறிப்பாக விலங்குகளுக்கு ஏற்படக்கூடியது. விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கும் ஏற்படலாம். 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்' எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.