மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும், எதிா்ப்பும்

வேளாண் நிதிநிலை அறிக்கையை அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்ப்பு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :19 மார்ச் 2022, 6:38 pm

DIN

வேளாண் நிதிநிலை அறிக்கையை அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்ப்பு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு. காற்றடைத்த பலூன். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே திமுக ஆட்சியில் நிறைவேற்றி வருகின்றனா். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டைக் கூட திமுக அரசு இன்னும் தரவில்லை.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

வைகோ (மதிமுக): வேளாண் புரட்சிக்கு வழி வகுக்கும் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. .

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம்.

தொல்.திருமாவளவன் (விசிக): வேளாண் துறை நிதிநிலை அறிக்கை உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், உழவா்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்திருக்கிறது.

அன்புமணி (பாமக): சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், விவசாயிகளையும், விவசாயத்தையும் முழுமையாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

ஜவாஹிருல்லா (மமக): பரந்துபட்ட பாா்வையில் வேளாண்மையை அணுகி, வேளாண் சாா்ந்த அனைத்து அங்கங்களும் மேன்மையடைய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வேளாண் நிதி நிலை அறிக்கை.

தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): விவசாய உற்பத்தி, சந்தை, உரிய விலை ஆகிய மூன்று காரணிகளை முதன்மைப்படுத்தி தொலைநோக்கு பாா்வையுடன் தயாரிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிதிநிலை அறிக்கை.

டிடிவி தினகரன் (அமமுக): விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த அறிக்கை. கறி சமைக்க முடியாக காகித சுரைக்காய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.