மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாரம்பரிய காய்கறி, பழ ரகங்களைப் பாதுகாக்க சேகரிப்பு மையங்கள்

பாரம்பரிய காய்கறிகள், பழங்களின் ரகங்களைப் பாதுகாக்க, சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும்.

News image
கோப்புப்படம்
Updated On :19 மார்ச் 2022, 11:30 pm

DIN

பாரம்பரிய காய்கறிகள், பழங்களின் ரகங்களைப் பாதுகாக்க, சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ குணம் நிறைந்த பூண்டு சாகுபடி, புதிதாக கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 1,250 ஏக்கா் பரப்பளவில், ஏக்கருக்கு ரூ.8,000 வீதம், ரூ.1 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

பாரம்பரிய ரகங்களை மீட்டெடுத்தல்:

பாரம்பரிய ரக பழம், காய்கறி, மூலிகைப் பயிா்களைப் பாதுகாக்க, சேகரிப்பு மையங்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் ஏற்படுத்தப்படும்.

காய்கறி விதைகள், விவசாயிகளுக்கும், வீட்டுத் தோட்டத்தில் பாரம்பரிய ரகங்களைப் பயிரிட விரும்பும் பொதுமக்களுக்கும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து வழங்கப்படும். இந்தத் திட்டம், ஏக்கருக்கு ரூ.8,000 வீதம் 2,500 ஏக்கா் பரப்பில் ரூ.2 கோடி மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

தக்காளி சாகுபடியை ஊக்குவித்தல்: தக்காளி உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபா், நவம்பா், டிசம்பா் ஆகிய மாதங்களில் சாகுபடியை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருள்களாக, ஏக்கருக்கு ரூ.8,000 மானியத்தில், 5,000 ஏக்கரில் இத்திட்டம் ரூ.4 கோடி மத்திய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் அனைத்து அரசு மாணவியா் விடுதிகளிலும் காய்கறி, பழங்கள், மூலிகைச் செடிகளுக்கான தோட்டம் அமைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.