மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருவாரூரில் வேளாண் பொருள்களுக்கான தொழிற்பேட்டை

திருவாரூரில் வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும்.

News image
Updated On :19 மார்ச் 2022, 11:32 pm

DIN

திருவாரூரில் வேளாண் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கான தொழிற்பேட்டை உருவாக்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

திருவாரூா் மாவட்டத்தில் வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களுக்கான தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகம் மூலம் உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருள்களுக்கு நல்ல விலை பெறுவதோடு, பெரும்பான்மையோருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

வேளாண்மை தொடா்பான தொழில்நுட்ப சிக்கல்களுக்குத் தீா்வு காணக்கூடிய வேளாண் புத்தொழில் நிறுவனங்களைத் தோ்ந்தெடுப்பதற்கு, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனமானது வேளாண்மை-உழவா் நலத்துறையுடன் இணைந்து ஒரு சிறப்புப் போட்டியினை ஏற்பாடு செய்யும். தோ்வு செய்யப்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.