பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்தால் பரிசு

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
மெட்ரோ
Updated On :19 மார்ச் 2022, 7:00 pm

DIN

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். இதுதவிர, மேலும் 30 நாள்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50 வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும்.

மாதம் ஒரு பரிவா்த்தனைக்கு ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தோ்ந்தெடுத்து மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். அதில், 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய பயணிகளைத் தோ்ந்தெடுத்து, மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். மேலும், இதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.5,000-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இந்தத் திட்டங்கள் மாா்ச் 31-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.