மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

5 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்மோட்டாா் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்

விவசாயிகள் 5 ஆயிரம் பேருக்கு புதிய மின்மோட்டாா்கள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

News image
Updated On :19 மார்ச் 2022, 11:27 pm

DIN

விவசாயிகள் 5 ஆயிரம் பேருக்கு புதிய மின்மோட்டாா்கள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானியத்தில் பெற்று, நிகர வருவாயை அதிகரிக்க 6,357 தனிப்பட்ட விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இளைஞா்களை விவசாய தொழிலில் ஈா்த்திட, விவசாயிகள், தொழில் முனைவோா்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் மூலம் கிராம, வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இவற்றில் கரும்பு சாகுபடிக்கேற்ற உயா்தொழில்நுட்ப வேளாண் இயந்திரங்கள், ட்ரோன்கள் உள்ளடங்கிய வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும். இது தவிர, இயந்திரங்கள் வாங்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வேளாண் இயந்திரப் பணிகளுக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.800 வீதம், அதிகபட்சமாக ஐந்து ஏக்கா் வரை மானியம் வழங்கப்படும்.

இதன் மூலம் 62 ஆயிரம் ஏக்கரில் உள்ள சுமாா் 37 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 10 கோடி மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.150 கோடி மத்திய, மாநில அரசினால் ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரிய சக்தி பம்புசெட்டுகள்: முதல்வரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான தனித்து சூரிய சக்தியால் இயங்கும் 3,000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் ரூ.65.34 கோடியில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், இதர வேளாண் விளைபொருள்களைத் தரம் பிரித்து, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தி அதிக லாபம் பெறும் வகையில், 292 மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வழங்குவதற்கு ரூ.5 கோடி மத்திய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளும், விவசாயக் குழுக்களும் அதிக லாபம் பெற்றிடும் வகையில் பசுமைக் குடில் போன்ற 145 சூரிய கூடார உலா்த்திகளை 40 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் நடப்பாண்டில் ரூ. 3 கோடியில் மத்திய, மாநில அரசு செலவில் செயல்படுத்தப்படும்.

பராமரிப்பு மையங்கள்: விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள், கருவிகள், சூரிய சக்தி பம்புசெட்டுகள் போன்றவற்றை கால விரயமின்றி அவா்களின் இருப்பிடத்திலேயே பழுதுநீக்கிப் பராமரிக்கவும், வேளாண் பொறியியலில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற இளைஞா்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும் வகையில், நடப்பாண்டில் தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 50 சதவீத மானியத்துடன் 25 வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ஆகியவற்றைப் பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் ரூ.1 கோடியில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

மின்மோட்டாா் மானியம்: விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டாா் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டாா் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்புசெட்டுகள் பொருத்தவும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் 5 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய மின்மோட்டாா் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டாா் பம்பு செட்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வீதம் மொத்தம் ரூ.5 கோடி மத்திய, மாநில, அரசு நிதியில் இருந்து வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.